Home> Movies
Advertisement

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் சூர்யா!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் சூர்யா!

பல வருடங்களுக்கு பிறகு சூர்யா & பாலா கூட்டணியில் உருவாகும் படத்திற்காக படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.  இதற்காக அந்த பகுதியில் மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது.  அங்கு விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் அந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளது.  சூர்யா நடிப்பில் சமீபத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படம் திரையரங்கில் வெளியானது.  இதற்கு முன்பு வெளியான சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தது.  

fallbacks

மேலும் படிக்க | ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த கேஜிஎஃப் 2

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து உள்ளனர்.  சூர்யாவின் 41-வது படமான பாலா படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். 

fallbacks

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இப்போது அங்கு நடுக்கடலில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.  மிகவிரைவாக இந்த படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது.  இந்த படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக சுதா கொங்கரா பணியாற்றி வருகிறார்.  இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.  மேலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் படிக்க | 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இவ்வளவு காமெடியன்களா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More