Home> Movies
Advertisement

ஆஸ்கர்ல மிஸ் ஆனாலும் இதுல மிஸ் ஆகல! - விருதைத் தட்டித் தூக்கியது ஜெய்பீம்!

இருளர் சமூக மக்களின் இன்னல்களைப் பேசிய சூர்யாவின் ஜெய்பீம் ஆஸ்கருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்கர்ல மிஸ் ஆனாலும் இதுல மிஸ் ஆகல! - விருதைத் தட்டித் தூக்கியது ஜெய்பீம்!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கிய படம் ஜெய்பீம். 

நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா தங்களது 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இப்படத்தைத் தயாரித்திருந்தனர். வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்த இப்படத்தில் மணிகண்டன் மற்றும் லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இருளர் சமூக மக்கள் படும் துயரங்களை வெளிப்படுத்திய இப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதேநேரம், படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் பாமக உள்ளிட்ட சில தரப்பினர் இப்படத்துக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அக்காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும் காட்சி தொடர்பாக நடிகர் சூர்யா மன்னிப்புக் கேட்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சூர்யா இறுதி வரை செவிசாய்க்கவில்லை.

மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

fallbacks

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக வெளியான இப்படம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது. அண்மையில் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாக்கும் ஜெய்பீம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இப்படம் விருதுக்கான பரிந்துரையில்கூட இடம்பெறவில்லை.

இந்நிலையில் இப்படம் தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகளைத் தற்போது வென்றுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த துணைக் கதாபாத்திரம் (மணிகண்டன்) ஆகிய இரண்டு பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More