Home> Movies
Advertisement

வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.. என்ட்ரியாகும் மாஸ் நடிகர்.. வெற்றிமாறனின் அதிரடி

Vaadivaasal Movie Update: வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ...

வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.. என்ட்ரியாகும் மாஸ் நடிகர்.. வெற்றிமாறனின் அதிரடி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக தற்போது பிரபல நடிகர் ஒருவர் அந்த காதபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வாடிவாசல் திரைப்படம்:
தமிழர் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளுள் ஒன்று, ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம்தான் வாடிவாசல். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக சில வருடங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. 1940ஆம் ஆண்டில் சி.எஸ் செல்லபா என்பவர் எழுதிய ‘வாடிவாசல்’ எனும் கதைப்புத்தகத்தை வைத்து எடுக்கப்பட உள்ள படம்தான் இது. இந்த படம் குறித்த அறிவிப்பு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால், வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. 

சமீபத்தில் பட அப்டேட் வெளியிட்ட வெற்றிமாறன்:
வெற்றிமாறனின் எல்லா படங்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது பாேல ‘வாடிவாசல்’ (Vaadivaasal) குறித்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் இதற்காக ஒரு தனி குழு பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | சீயான் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் எஸ்ஜே சூர்யா!

சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ்:
இதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால் வெற்றிமாறன் இன்னும் விடுதலை இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியே வரவில்லை. சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை 2 இந்தாண்டு வெளியாகிறது. வெற்றிமாறனுக்காக காத்திருந்த சூர்யா விடுதலை 2 முடியவில்லை என்பதால் சுதா கொங்கராவுடன் இணைந்தார். இதன் ஷூட்டிங் தற்போது தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது வாடிவாசல் திரைப்படதிற்கு மற்றொரு பஞ்சாயத்தும் ஏற்பட்டுள்ளது. அதன்படி வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாக வெற்றிமாறன் அறிவித்தார். அதேநேரம் பருத்திவீரன் பட சர்ச்சையில் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் காரணமாக இந்த விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அமீருடன் சூர்யா (Actor Suriya) இணைந்து நடிக்க மாட்டார் என்று செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் யார் நடித்தாலும் சரி இல்லையென்றாலும் அமீர் கட்டாயம் வாடிவாசல் படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் விஜய்யின் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்குயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், வாடிவாசல் படப்பிடிப்பு தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுக்கிறது. 

இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக வாடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் (Actor Dhanush) இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினம் இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் புதிய அதிரடி ஆக்ஸர் திரில்லர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More