Home> Movies
Advertisement

பூஜையுடன் துவங்கிய சூர்யா 42 படப்பிடிப்பு; வெளியானது முக்கிய தகவல்

Suriya 42 Tamil Movie: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. 

பூஜையுடன் துவங்கிய சூர்யா 42 படப்பிடிப்பு; வெளியானது முக்கிய தகவல்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளள அவரது 42வது படத்தின் பூஜை இன்று காலை சென்னை ராமாபுரத்தில் பூஜையுடன் துவங்கியது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சூர்யா, சிவா, மோகன்லால், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா 42 படம் மூலம் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவுடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தார் திஷா. இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!

முன்னதாக சூர்யாவின் மாயாவி, சிங்கம், சிங்கம் 2, ஆறு ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா 42 பான் இந்திய படமாக உருவாகவிருக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வெற்றி பழனிச்சாமி மேற்கொள்கிறார். ஆதிநாராயணா கதை எழுத, மதன் கார்க்கி வசனகர்த்தாவாக படத்தில் இடம்பெற்றுள்ளார். பூஜையை தொடர்ந்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

முன்னதாக ஜெய்பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்து வருவதால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

fallbacks

மேலும் படிக்க | அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா

மேலும் படிக்க | விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடல் புகழ் பாடகி சங்கீதா காலமானார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More