Home> Movies
Advertisement

சூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு

இந்த பைனல் போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டத்தை அறிவிப்பார்.

சூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர். 

அதன்படி தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8வது சீசன் (Super Singer 8) இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சூப்பர் சிங்கர் 8 போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது பைனல் போட்டிக்கு முன்பு சூப்பர் சிங்கர் Pre-Final நேற்று நடைபெற்றது. இந்த சூப்பர் சிங்கர் Pre-Final நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி வருகை தந்து நிகழ்சியை சிறப்பித்து வைத்தார்.

ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

இந்நிலையில் இன்று 26 செப்டம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இந்த இசை நிகழ்ச்சியின் பைனல் போட்டி நேரலையில் நடக்க உள்ளது. ஆறரை மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் ஜட்ஜ்ஸ் ஆக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் எஸ்பிபி சரண் ஆகியோர் உள்ள நிலையில் சிறப்பு ஜட்ஜ்ஜாக சித்ரா, மால்குடி சுபா, கல்பனா, அனந்த் வைத்தியநாதன் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். 

மேலும் இந்த பைனல் போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டத்தை அறிவிப்பார். எனவே இறுதியாக உள்ள இந்த 6 பேர் போட்டியாளர்களில் அந்த பிரம்மாண்ட டைட்டிலை பெறுவது யார் என்பதை தெரிந்துகொள்ள இன்று மதியம் வரை காத்திருக்க வேண்டும்.

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More