Home> Movies
Advertisement

மார்ச் 29 முதல் விஜய்சேதுபதியின் Super Deluxe!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது.

மார்ச் 29 முதல் விஜய்சேதுபதியின் Super Deluxe!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது.

‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

படத்தின் திரைகதை குறித்த தகவல்கள் ரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. எனினும் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் அனைவரும் அறிந்த விஷயம்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. அதோடு இன்று டிரைலர் வெளியாகும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது.

 

 

Read More