Home> Movies
Advertisement

சுந்தர்.சி -யின் 'சங்கமித்ரா' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுந்தர்.சி -யின்  'சங்கமித்ரா' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இயக்குனர் சுந்தர் சி-யின் கனவு படம் ‘சங்கமித்ரா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100_வது படத்தை இயக்க சுந்தர்.சி. ஒப்பந்தமானார். இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் 250 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பலரும் தயங்கினார்கள்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் 'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி - ஆர்யா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை சாபுசிரில் ஒப்பந்தமாகி உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்திய அளவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Read More