Home> Movies
Advertisement

சுந்தர்.Cக்கு வில்லனாக அனுராக் காஷ்யப்! ஒன் 2 ஒன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

One 2 One First Look: கோலிவுட் திரையுலகின் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.C புதிதாக “ஒன் 2 ஒன்” என்ற படத்தில் நடிக்கிறார்.  

சுந்தர்.Cக்கு வில்லனாக அனுராக் காஷ்யப்! ஒன் 2 ஒன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தமிழ் திரையுலகின் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர், சுந்தர்.சி. தமிழில் 80 மற்றும் 90களில் தான் உதவி இயக்குநராக பணி புரிந்த படங்களில் கெளரவ தோற்றத்தில் நடித்து வந்த இவர், சமீப காலமாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் அடுத்து நடித்து வரும் படம், ஒன் 2 ஒன். 

"ஒன் 2 ஒன்"  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.  ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக்  உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க | அரண்மனை 4 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி?

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து  நடிக்கின்றனர்.  சுந்தர்.Cயின் அரண்மனை 4 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இதுவரை நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன்  வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அனுராக் காஷ்யப்:

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர், அனுராக் காஷ்யப். இவர், 2018ஆம் ஆண்டு தமிழில் ஆக்ஷன்-க்ரைம்-த்ரில்லர் படமாக வெளியான “இமைக்கா நொடிகள்” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் வில்லனாக களமிறங்கும் படம், ஒன் 2 ஒன். இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியாே’ படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | பொங்கலுக்கு சம்பவம்.. ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More