இளைய தளபதி விஜய் நடித்து ரிலீஸூக்கு தயாராக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விம்ரசன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றதால், இந்தப் படமும் விஜய்க்கு மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் படம் வெளியாக 15 நாட்களே இருக்கும் நிலையில், டிரெய்லர் குறித்த அப்டேட்டை சன்பிக்சர்ஸ் வெளியிடாமல் இருந்தது.
மேலும் படிக்க | முன்னாள் ஹீரோயினின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகும் விஜய்
பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்கு அடுத்த நாள் ரிலீஸாக இருக்கும் கேஜிஎப் 2 படத்தின் டிரெய்லர் அண்மையில் ரிலீஸானது. பக்கா ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், பீஸ்ட் டிரெய்லர் அப்டேட்டை ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். இயக்குநர் நெல்சன் திலிப்குமார் மற்றும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தை டிவிட்டரில் டேக் செய்து, பீஸ்ட் டிரெய்லர் அப்டேட்டை கேட்டு வந்த ரசிகர்களுக்கு, நேற்று நெல்சன் திடீரென பதிலளித்தார். அவருடைய பதிலில் ‘நாளை’ என மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PM
— Sun Pictures (@sunpictures) March 30, 2022
Namma aattam inimey vera maari irukum @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L
நெல்சனின் இந்த பதிவால் இன்று மாலை பீஸ்ட் டிரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் பீஸ்ட் டிரெய்லரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப டிவிட்டரில் பீஸ்ட் அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ‘நம்ம ஆட்டம் இனி வேறமாறி இருக்கும்’ என சுமார் 6 நொடிகள் கொண்ட வீடியோவை சன்பிகச்ர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் மாஸ் பேக்கரவுண்ட் மாஸ் மியூசிக்கில் கையில் கன்னுடன் விஜய் உள்ளார். அந்த வீடியோவில் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் பிஸ்னஸ் சீக்ரெட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR