Home> Movies
Advertisement

சைக்கிளிங்கில் சாதனை படைத்த ஆர்யா - குவியும் வாழ்த்து

லண்டனில் நடந்த சைக்கிளிங் போட்டியில் தனது குழுவினருடன் பங்கேற்ற நடிகர் ஆர்யா 1,540 கிமீ கடந்துள்ளார்.

சைக்கிளிங்கில் சாதனை படைத்த ஆர்யா - குவியும் வாழ்த்து

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யாவும், இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால்இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இதற்கிடையே நடிகர் ஆர்யா நடிப்பைத் தாண்டி சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. பா. இரஞ்சித்தும், விக்ரமும் இணைந்திருக்கும் படத்துக்கு பூஜை சமீபத்தில் போட்டபோதுகூட ஆர்யா சைக்கிளிங் சென்றபோது அதில் கலந்துகொண்டார்.

 

அதுமட்டுமின்றி, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற, லண்டன்- எடின்பர்க்-லண்டன் 1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் தனது குழுவினருடன் கலந்துகொண்டு நிறைவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க... அதிதி எனக்கு தங்கச்சிங்க - பல்டி அடித்த கூல் சுரேஷ்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’என் வாழ்க்கையின் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. அடுத்த சவாலுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா - ரஜினிக்கு மகளின் வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More