Home> Movies
Advertisement

சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி இல்லை! யார் ஹீரோ தெரியுமா?

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி இல்லை! யார் ஹீரோ தெரியுமா?

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பெரியளவில் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'சூது கவ்வும்'.  இப்படத்தை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.  ரூ.2 கோடி பட்ஜெட் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த டார்க் காமெடி க்ரைம் திரைப்படம் மொத்தமாக ரூ.35 கோடி வசூல் செய்திருந்தது.  இப்படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவி, முனீஸ்காந்த் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  

மேலும் படிக்க | இனி ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா..பாக்கியலட்சுமியில் டுவிஸ்ட்

fallbacks

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார், இதுதவிர கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் சிலர் நடிக்கின்றனர்.  மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.  'யங் மங் சங்' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அர்ஜுன் தான் 'சூது கவ்வும் - 2' படத்தை இயக்குகிறார்.  இப்படத்திற்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்ய, இக்னேஷியஸ் அஷ்வின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.  

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, அந்த போஸ்டரில் ‘சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.  விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.  மேலும், தமிழில் உருவாகும் புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.  இது தவிர ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More