Home> Social
Advertisement

வெளியானது காலக்கூத்து திரைப்படத்தின் Sneak Peek வீடியோ!

"காலக்கூத்து" திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

வெளியானது காலக்கூத்து திரைப்படத்தின் Sneak Peek வீடியோ!

"காலக்கூத்து" திரைப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகர் பிரசன்னா, கலையரசன் இணைப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "காலக்கூத்து". மதுரையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இத்திரைப்படத்தில் கலையரசன் வேலை தேடும் இளைஞராகவும், பிரசன்னா இருசக்கர வாகன விற்பனையாளராகவும் நடிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜோடியாக தன்ஷிகா மற்றம் சுருதி தாங்கே நடிக்கின்றனர். இப்படத்தில் தன்ஷிகா கல்லூரி மாணவியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் நாகராஜன் இப்படத்தினை குறித்து தெரிவிக்கையில்... மதுரையில் வாழும் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நிகழும் இன்பத் துன்பங்களை இப்படம் வெளிக்காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் வரும் மே 25-ஆம் நாள் திரைக்கு வரும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் Sneak Peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Read More