Home> Movies
Advertisement

தமிழ் சினிமாவின் டான் ஆகிவிட்டாரா சிவகார்த்திகேயன்?... ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டான் ஆகிவிட்டாரா சிவகார்த்திகேயன்?... ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை நம்பி பணத்தை முதலீடு செய்தால் போட்ட பணமும், கூடுதலாகவே லாபமும் கிடைக்கும் என்ற நிலை கோலிவுட்டில் தற்போது உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவரத்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டான். எஸ்.ஜே. சூர்யா, ப்ரியங்கா மோகன், சிவாங்கி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இப்படமானது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படத்தில் எமோஷனல் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

fallbacks

இந்நிலையில் டான் படத்தின் வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டான் படம் முதல் மூன்று நாள்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பாலிவுட்காரர்கள் அவித்த முட்டைகள் - கங்கனா ரணாவத் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 8 கோடியே 60 லட்ச ரூபாயும், இரண்டாவது நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாவது நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

fallbacks

இந்தத் தகவலை கேள்விப்பட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “தமிழ் சினிமாவின் டான் சிவகார்த்திகேயன்” என கூறியதை சிவா நிரூபித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More