Home> Movies
Advertisement

டசக்கு டசக்கு- ‘விக்ரம் வேதா’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு

டசக்கு டசக்கு- ‘விக்ரம் வேதா’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.

'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். வினோத் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு சாம் இசையமைத்து இருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான 'டசக்கு டசாக்கு' பாடல் வெளியாகியுள்ளது இப்லைபாடலை நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Read More