Thug Life update Silambarasan TR Update: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் சிம்புவின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
தக் லைஃப் திரைப்படம்:
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தான் தக் லைஃப் (Thug Life). கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தக் லைஃப் படக்குழு விவரம்:
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர், த்ரிஷா ஆவார். இவர், ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் சிம்பு ஆவார். இவரும் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றனர். இதன் மூலம் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர்.
#Thuglife - Ulaganayagan #Kamalhaasan in Sathya look & #SilambarasanTR in Kaalai look..
— Laxmi Kanth (@iammoviebuff007) May 6, 2024
• Shoot is currently happening in Delhi.. Vaiyapuri, Naaser, Abhirami too seen with Aandavar & STR..
• A Promo video expected today evening..
• Bollywood actors Ali Fazal & Sanya…
இந்நிலையில் தற்போது தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் சிம்பு கமல்சானுக்கு மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
In the Realms of Dust, a New Thug Arises!
— Raaj Kamal Films International (@RKFI) May 8, 2024
STR @SilambarasanTR_ makes his Mark
https://t.co/ebMfgpIOch#Ulaganayagan #KamalHaasan #ThugLife #NewThugInTown #SilambarasanTR@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @abhiramiact #Nasser… pic.twitter.com/ot4edF66uq
மேலும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ