Home> Movies
Advertisement

‘அயலான்’ ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Siddharth Salary For Ayalaan: அயலான் படத்தில் வரும் ஏலியனுக்கு, நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்துள்ளார். இதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

‘அயலான்’ ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ரவிக்குமார் தனது முதல் படத்தை வெற்றி படமாக பதிவு செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மாற்று குடும்ப ரசிகர்களுக்கு இடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அயலான் படக்குழுவினர்:

அயலான் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது, இந்த படத்தில் சரத் கேல்கர்,ஆயிஷா கொப்பிகர்,பானு பிரியா மற்றும் யோகி பாபுனு மூக்கை ரோல் நடிச்சிருக்காங்க.இந்த படம் 24 AM ஸ்டுடயோ மற்றும் PhantomFX ஸ்டுடயோ தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கிறது.

சம்பளத்தை தியாகம் செய்த சிவகார்த்திகேயன்:

அயலான் ஒரு பெரிய பட்ஜெட் படம், இந்த படத்தின் படப்பிடிப்பும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில், படம் நேற்று (ஜனவரி 12) வெளிவந்தது. இந்த படத்தில் CG மற்றும் கிராஃபிக்ஸ் செலவு படத்தின் பட்ஜெட்டை தாண்டி சென்றதாக படக்குழுவினர் பல நேர்காணல்களில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்காக CG  செலவை சமன் செய்வதற்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். 

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்-எதை முதலில் பார்க்கலாம்? ரசிகர்களை கவர்ந்த படம் எது?

சித்தார்த் சம்பளம்:

சிவகார்த்திகேயன் போலவ, நடிகர் சித்தார்த்தும் அயலான் படத்திற்காக சம்பளம் வாங்காமல் வேலை பார்த்து கொடுத்திருக்கிறார். இவர், இந்த படத்தில் வரும் ஏலியனுக்கு சம்பளம் வாங்காமல் வாய்ஸ் கொடுத்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இதற்கு முன்னர், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் வெளியானது. அந்த படத்தில் வரும் முக்கிய குரலாக இருந்தவர், விஜய் சேதுபதி. அவரும் இந்த படத்திற்கு வாய்ஸ் கொடுத்தற்காக சம்பளமே வாங்கவில்லையாம். இப்படி, சிவகார்த்திகேயனுக்கு ஒன்று என்றால், உடன் இருக்கும் பெரிய நடிகர்கள் உதவி செய்வது ரசிகர்களை மகிழ்ச்சிப்பட செய்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு அயலான் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய கே ஜே ராஜேஷ் “பாகுபலி டோலிவுட் சினிமாவை மாற்றியத்தாகவும் அதே பெயரை அயலானும் பெறும்” என கூறியுள்ளார். இந்த பெயரை படம் பெற்றதா என்பதை ரசிகர்கள்தான் படம் பார்த்த பின்பு கூற வேண்டும். 

படத்தின் முதல் நாள் வசூல்:

இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் 9 கோடிக்கு மேல் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் அயலான் படத்தின் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More