Home> Movies
Advertisement

Selvaraghavan: துப்பாக்கியுடன் செல்வராகவன்; புகைப்படம் வைரல்

இயக்குனர் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Selvaraghavan: துப்பாக்கியுடன் செல்வராகவன்; புகைப்படம் வைரல்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உட்பட பிரபலமான பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது இவர் நடிகராக அறிமுகம் ஆகயுள்ளார். செல்வராகவன் முதல் முறையாக சாணிக் காகிதம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தான் நடிப்பதாக 2 மாதங்களுக்கு முன் செல்வராகவன் தகவல் வெளியிட்டார்.

இந்த படத்தை இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். மேலும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த (Saani Kaayidham) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாவது போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் செல்வராகவனின் (Selvaraghavan) கேட்அப், பலரின் பாராட்டுக்களை பெற்றது. ஏற்கனவே கையில் ரத்த கரையுடன் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோவை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

ALSO READ | புதுப்பேட்டை 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்

இந்நிலையில் நேற்று, கையில் ரத்தக்கரையுடன் துப்பாக்கியை தூக்கியபடி நிற்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது செல்வராகவன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தில் பலர் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

ALSO READ | அண்ணன் நடித்த‘சாணிக் காயிதம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More