Home> Movies
Advertisement

Sandhya Raagam: குடும்ப கவுரவம் தான் முக்கியம் காதல் இல்ல! அதிர்ச்சி கொடுக்கும் மாயா!

sandhya raagam tv serial: உடைந்தது ரகசியம்.. மாயாவுக்கு தெரிய வரும் சீனுவின் காதல், அடுத்து நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

Sandhya Raagam: குடும்ப கவுரவம் தான் முக்கியம் காதல் இல்ல! அதிர்ச்சி கொடுக்கும் மாயா!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனு மாயாவை வீட்டு அழைத்து செல்ல பண்ணை வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

நிச்சயம் நின்றதா?

இன்றைய சீரியல் எபிசேடில் நிச்சயம் நின்னுடுச்சா? உன்னுடைய காதலை பற்றி சொல்லிட்டியா என்று மாயாவிடம் சீனு கேட்கிறார். எனக்கு மாமாவோட வார்த்தை, குடும்பத்தோட கவுரவம் தான் முக்கியம், அதனால் எதுவும் சொல்லல, நிச்சயம் நடந்து முடிந்து விட்டது என்று சொல்ல மாயா அதிர்ச்சி அடைகிறாள். 

அவ்வளவு தான் உன் காதல் செத்து போச்சு, இனிமே எதுக்கு இந்த டைரி என்று சீனுவின் டைரியில் தீயில் போட்டு எரிக்க போகும் போது அதிலிருந்து மாயாவின் போட்டோ கீழே விழுகிறது. அப்போது, சீனு காதலிப்பது தன்னை தான் என்ற உண்மை மாயாவுக்கு தெரிய வருகிறது.

fallbacks

அங்கிருந்து சீனுவிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வரும் மாயா கோபமாக உள்ளே செல்வதை பார்த்து ஜானகி என்னாச்சு என்று கேட்க சீனு ஒன்னும் இல்ல என்று சொல்லி சமாளிக்கிறான். 

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்து மறுநாள் காலேஜ் கிளம்பும் மாயா சீனுவுடன் செல்ல மறுத்து சிவராமன் சித்தப்பாவுடன் செல்கிறாள். சீனு மாயாவை சந்தித்து உனக்கு என்னுடைய காதல் புரியலையா என்று கேட்க நான் உன்கூட பேசி பைக்ல வந்தா அது காதலாகிடுமா? இதுவரைக்கும் எனக்கு உன்மேல அப்படி ஒரு எண்ணமோ ஆசையோ வந்ததில்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More