Home> Movies
Advertisement

அம்மாவின் இழப்பு..ஜானகி மீது கோபத்தை கொட்டும் மாயா-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!

Sandhya Raagam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். 

அம்மாவின் இழப்பு..ஜானகி மீது கோபத்தை கொட்டும் மாயா-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்தியாவின் உயிர் ஜானகி மடியில் பிரிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஜானகி ரகுராமுக்கு போன் செய்து சந்தியா இறந்து போன விஷயத்தை சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், அஸ்தி கரைக்க வேண்டிய வேலையெல்லாம் இருக்கு என்று சொல்ல சரி முடித்துட்டு வா என்று அனுமதி கொடுக்கிறார். 

அடுத்ததாக கிஷோர் மாயாவிடம் இந்தியாவிற்கு சென்று விடலாம் என்று சொல்ல நான் இந்த வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என அடம் பிடிக்கிறாள், அடுத்து ஜானகி மாயாவின் துணி மணிகளை எடுத்து வைக்க சந்தியா கொடுத்த லெட்டரை எடுத்து கையில் வைத்து பார்த்து கொண்டிருக்க அங்கு வந்த மாயா நீங்க வந்ததால் தான் என் அம்மா செத்து போனாங்க, என்னை அனாதையாக்கிடீங்க என்று கோபப்படுகிறாள். வெளியே போங்க என்று ரூமை விட்டு துரத்துகிறாள்.

மேலும் படிக்க | லியோ-2 படம் தயாராகுமா? லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் இதுதான்!

அதன் பிறகு வெளியே வந்த ஜானகி தனக்கும் சந்தியாவிற்கு இடையேயான நினைவுகளுடன் போட்டோ பக்கத்தில் சோகமாக உட்கார்ந்திருக்க அஸ்தி வீட்டிற்கு வருகிறது. பிறகு கிஷோர் உங்க அம்மாவோட ஆசை அனைத்தும் இந்தியா தான், அதனால் அங்கே போய் அஸ்தியை கரைப்பது தான் சரி என்று சொல்லி ஒருவழியாக சம்மதிக்க வைக்கிறார். 

அடுத்து ரகுராம் குடும்பம் மொத்தமும் ஆற்றங்கரையில் காத்திருக்கும் ஜானகி கிஷோர் மற்றும் மாயாவுடன் வந்திறங்க அதை பார்த்து ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More