Home> Movies
Advertisement

அள்ளி வரும் வாய்ப்புகள்; பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா

ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த தொடரிலும் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அள்ளி வரும் வாய்ப்புகள்; பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா

சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தி ஃபேமிலிமேன் 2 என்ற வெப்தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 

ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகிய ‘தி ஃபேமிலிமேன் 2’ (The Family Man 2) என்ற வெப்தொடர் அமேசான் ஓடிடியில் கடந்த ஜூன் மாதம் வெளியானது. சமந்தா (Samantha), பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் உள்பட பலர் வெப்தொடரில் நடித்து இருந்தனர். 

ALSO READ | ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய 'மாநாடு'!

இந்த நிலையில் தற்போது மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் தொடரில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் ஓடிடிக்காக உருவாக்கப்படும் இந்த த்ரில் மற்றும் ஆக்சன் வெப்தொடரில் நாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் கூட இது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த அதிரடித் தொடரின் பெண் கதாநாயகியாக நடிப்பதற்கு பல தேடுதலுக்கு பிறகு நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடி முதல் முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த தொடர் அடுத்த ஆண்டு 2022 இல் தொடங்கப்பட்டு 2023 இல் அமேசான் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும் என கூறப்படுகிறது. சமந்தா தற்போது உள்ள படங்களை முடித்துவிட்டு இத்தொடரில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

ALSO READ | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More