Home> Movies
Advertisement

பெயருக்கு பின்னால் எதற்கு ஜாதி..!! கலக்கும் “பாரத்” படத்தின் டீசர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து வரும் “பாரத்” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பெயருக்கு பின்னால் எதற்கு ஜாதி..!! கலக்கும் “பாரத்” படத்தின் டீசர்

சல்மான் கானின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாக “பாரத்” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்த்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. நீண்ட காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது மிகவும் எதிர்பார்க்கப்படும் “பாரத்” திரைப்படம் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது. 

“பாரத்” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீஸர் 1.26 நிமிடம் ஓடக்கூடியதாக உள்ளது. அதில் சல்மான் கான் மீண்டும் தனது பாணியில் காணப்படுகிறார். இந்த படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்கும் கத்ரீனா குறித்து டீஸரில் எதுவும் காட்டவில்லை. 

 

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபார் இயக்கி உள்ளார். சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் திசா பட்டானி, தபு மற்றும் சுனில் க்ரோவர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Read More