Home> Movies
Advertisement

'சைத்தான்' படத்தின் புதிய டீஸர்

'சைத்தான்' படத்தின் புதிய டீஸர்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சைத்தான்' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் நடத்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது.

இந்த படத்தின் டீஸரில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், சமஸ்கிருத மந்திரத்தை ஒட்டியிருப்பதாக சர்ச்சையானது. 

இச்சர்ச்சை குறித்து விஜய் ஆண்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'சைத்தான்' படத்தின் டீஸர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால், சிலர் மனவருத்தத்துக்கு உள்ளானதை நான் அறிந்தேன். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது யூடுப், முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் நீங்கள் 'சைத்தான்' படத்தின் டீஸரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து அக். 6-ம் தேதி புதிய டீஸரை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல 'சைத்தான்' படத்தின் புதிய டீஸர் வெளியிடப்பட்டது.

புதிய டீஸர்:

Read More