Home> Movies
Advertisement

பிரமாண்டம்! 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

RRR Teaser: 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தொடர்பான அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, இன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரமாண்டம்! 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

RRR Teaser: பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கில் "ஆர்.ஆர்.ஆர்" (RRR) என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்துள்ளனர். அஜய் தேவகன், சமுத்திரகனி, அலியாபட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஆர்.ஆர்.ஆர்' (RRR)  படத்தின் படப்பிடிப்பு முடிவடைத்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. 

'ஆர்ஆர்ஆர்' படத்தின் தொடர்பான அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, இன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் 40 வினாடிகள் கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு RRR இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது, "#RRRMovie இன் சகாப்தம் இப்போதுதான் தொடங்கியது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட #RRRGlimpse ஐ ​​வழங்குகிறோம் எனப் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆரின் ஆக்சன் காட்சிகள், அலியாபட் மற்றும் அஜய் தேவ்கான் காட்சிகள் உள்பட பல பிரமிக்கத்தக்க காட்சிகள் உள்ளன.

வீடியோ காணுங்கள்:

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More