Home> Movies
Advertisement

RRR படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

RRR படத்தின் முதல் நாள் வசூல் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களை மிஞ்சி சாதனை படைத்து இருக்கிறது.  

RRR படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

எஸ்.எஸ்ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் போன்றவர்களது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. பாகுபலிக்கு பின் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பை இயக்குனர் ராஜமௌலி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தை திரையில் காண தவமாய் தவமிருந்து வந்தனர். மார்ச் -25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதோடு பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

fallbacks

மேலும் படிக்க | RRR படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா?

இந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் போராட்ட கதையை புனைந்து இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரிப்பில் இந்த திரைப்படம் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ளது.

fallbacks

இந்த பிரம்மாண்ட திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 18 கோடி ருபாய் வசூல் செய்த நிலையில், இதேபோல் அமெரிக்காவிலும் இப்படம் சிறந்த முறையில் கல்லா காட்டியுள்ளது. மேலும் இப்படம் உலகளவில் வெளியான முதல் நாளிலேயே 257.15 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இந்த படம் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தின் வசூலையும், சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வசூலையும் மிஞ்சியுள்ளது. RRR படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இருப்பினும் இதன் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் இப்படம் 90 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதற்கு முன்பு நெட்ப்ளிக்ஸில் வெளியிடப்படாது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பீஸ்டுடன் மோதும் மற்றொரு படம் - பாக்ஸ் ஆஃபீஸ் பாதிக்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More