Home> Movies
Advertisement

டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள வீட்ல விசேஷம்  படம் ஜூன் 17ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  

டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பின்பு திரைத்துறையில் நடிகராக களம் இறங்கி தற்போது இயக்குனராகவும் மாறி உள்ளவர் ஆர்ஜே பாலாஜி. நானும் ரவுடி தான், வடகறி, தேவி 2 போன்ற படங்கள் இவருக்கு காமெடியனாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பின்பு 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற படத்தை எழுதி நடித்திருந்தார், அதன்பின்பு மூக்குத்தி அம்மன் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணனும் இணைந்து இயக்கி இருந்தனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்தப்படமும் ஒரு பொலிடிக்கல் சட்டையர் படமாக இருந்தது. 

fallbacks

மேலும் படிக்க | உங்க மாமனார் தான் காரணம்: தனுஷிடம் இளையராஜா கூறிய விஷயம்!

தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.  அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்கி நடித்து வருகிறார்.  ஹீரோவிற்கு கல்யாணம் ஆகும் வயதில் அவரது அம்மா கர்ப்பமாக, அதனை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற கதையம்சம் கொண்ட இந்தப் படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சமீபத்தில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

வீட்ல விசேஷம்  என்ற தலைப்பில் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி போன்றோர் நடித்துள்ளனர். ஜூன் 17ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர் ஒருவர், "இது கான்ட்ரோவெர்சியான கதை, இப்படம் தமிழ்நாட்டில் எப்படி ஓடும் என்று தெரியாது" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் கூறிய பாலாஜி,"ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம் !!!" என்று கூறியுள்ளார். பாலாஜி எந்த நடிகரை மையமாக வைத்து இப்படி கூறினார் என்பது தெரியவில்லை, இருப்பினும் ஒவ்வொரு ரசிகர்களும் மற்ற ரசிகர்களை உங்க ஹீரோவைதான் கலாய்த்துள்ளார் என்று இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்க | பீஸ்ட் vs KGF2: ஏப்ரலில் ரிலீஸ் செய்வதற்கான பின்னணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More