Home> Movies
Advertisement

வெளியானது நயன்-அதரவாவின் #நீயும்நானும் லிரிக் வீடியோ!!

வெளியானது நயன்-அதரவாவின் இமைக்கா நொடிகள் படத்தின் நீயும் நானும் லிரிக் வீடியோ சாங்!! 

வெளியானது நயன்-அதரவாவின் #நீயும்நானும் லிரிக் வீடியோ!!

வெளியானது நயன்-அதரவாவின் இமைக்கா நொடிகள் படத்தின் நீயும் நானும் லிரிக் வீடியோ சாங்!! 

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

அத்துடன் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 

ஏற்கனவே படத்தில் இருந்து `காதலிக்காதே', `விளம்பர இடைவெளி' என்று இரண்டு பாடல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்கள் வெளியிடப்பட்டதுடன் படத்தின் டிரைலரையும் வெளியிட்டனர். இதையடுத்து, இன்று இப்படத்தின் பாடல்வரிகளுடம் கூடிய வீடியோவை இன்று வெளியிடுவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியானது கீழே இணைக்கப்பட்டுள்ளது!   

 

Read More