Home> Movies
Advertisement

ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளமா?

ஒரு நடிகையாக ராஷ்மிகாவின் மாத சம்பளம் ரூ.60 லட்சத்துக்கும் மேல் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  இவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.8 கோடியாகும்.  

ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளமா?

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா: தி ரைஸ், மிஷன் மஜ்னு போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று.  26 வயதாகும் இந்த பான் இந்திய நடிகை தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறி, பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் மாறிவிட்டார்.  இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' எனும் படத்தில் நடித்து தனது பாலிவுட் திரையுலகில் தனது இன்னிங்க்ஸை தொடங்கினார்.  அதன் பிறகு தளபதி விஜய் நடித்த பான்-இந்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து பிரபலமானார்.  இன்று பிறந்தநாள் காணும் இவரின் சொத்து மதிப்புகள் பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?

fallbacks

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ராஷ்மிகா மந்தனாவின் நிகர மதிப்பு சுமார் $8 மில்லியன் (INR இல் 65 கோடிகள்) ஆகும்.  ஒரு நடிகையாக இவரது மாத சம்பளம் ரூ.60 லட்சத்துக்கும் மேல் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  இவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.8 கோடியாகும்.  ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு சுமார் ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார்.  நடிப்பு, பெர்ஃபார்மர், என்டோர்ஸ்மென்ட் மற்றும் மாடலிங் என பல துறைகளிலும் இவர் வருமானம் ஈட்டி வருகிறார்.  திரைப்படத் துறையில் புகழ்பெற்ற மற்றும் வசதியான நபர்களில் ஒருவராக இருப்பதைத் தவிர, நடிகை ராஷ்மிகா தொண்டு செய்வது மற்றும் சமூக நலம் பேணுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு பிரபலமாக இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் கொண்டு, நாடு முழுவதும் சில ஆடம்பர சொத்துக்களில் முதலீடு செய்திருக்கிறார்.  அவருக்கு பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்பில் பெரிய மாளிகை இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் மும்பையில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராகவும் இவர் இருப்பதாக கூறப்படுகிறது.  பாலிவுட்டில் ஆடம்பர கார்களை வைத்திருப்பதில் விருப்பம் கொண்ட பெண்களில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர்.  ராஷ்மிகா ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ்-சி கிளாஸ் கார், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3 கார்களை வைத்திருக்கிறார்.  இந்த கார்கள் தவிர, டொயோட்டா இனோவா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களையும் வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More