Home> Movies
Advertisement

ரஜினி - அக்ஷய் நடிப்பில் உறுவான 2.0 சீனாவில் வெளியாகிறது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உறுவான 2.0 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் நாள் சீனாவில் வெளியாகவுள்ளது!

ரஜினி - அக்ஷய் நடிப்பில் உறுவான 2.0 சீனாவில் வெளியாகிறது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உறுவான 2.0 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் நாள் சீனாவில் வெளியாகவுள்ளது!

கடந்த 2010-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உறுவாகி வெளியான எந்திரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாக 2.0  உறுவாக்கப்பட்டது. 

எந்திரன் திரைப்படம் இந்தியா மட்டும் அல்லாமல் சீனா உள்பட பல நாடுகளில் வெற்றி நடைப் போட்டதை அடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தினையும் சீனாவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சீனாவின் Beijing HY Media Co Ltd நிறுவனத்தின் உதவியிடன் இந்த திரைப்படம் சீனாவில் வெளியிடப்படவுள்ளது.

இந்திய படைப்புகளுக்கு சீனாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. குறிப்பாக திரைப்படங்களை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த வகையில் சீன ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு ரஜினி மற்றும் அக்ஷய் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தினை படக்குழுவினர் சீனாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த 2.0 திரைப்படமானது ஷாங்காய் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More