Home> Movies
Advertisement

ரஜினி - நெல்சன் படத்தில் நானா? மறுப்பு தெரிவித்துள்ள முன்னணி நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை முன்னணி நடிகை மறுத்துள்ளார். 

ரஜினி - நெல்சன் படத்தில் நானா? மறுப்பு தெரிவித்துள்ள முன்னணி நடிகை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இந்தப் படத்துக்குப் பிறகு ஓய்வெடுத்த ரஜினிகாந்த் பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு, கடைசியாக நெல்சன் திலிப்குமாரின் கதையை டிக் செய்தார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார்.அண்மையில் இதற்கான அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 

fallbacks

மேலும் படிக்க | ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்?

அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வியாபாரத்தைக் கொடுக்காத நிலையில், தலைவர் 169 படத்தின் மூலம் மீண்டும் மிகப்பெரிய பிளாக்பஸ்டரைக் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாக மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என அண்ணாத்த படக்குழு எதிர்பார்த்து இருந்தது. இருப்பினும் கையைக் கடிக்காத அளவுக்கான வெற்றியைக் கொடுத்ததால், மகிழ்ச்சியடைந்த ரஜினி, இயக்குநர் சிவா உள்ளிட்டோருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து பாராட்டினார். 

fallbacks

இப்போது, அவர் நடிக்கும் படத்துக்கான தயாரிப்புகளை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் உள்ளிட்டோருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஹீரோயின் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன், தலைவர் 169 -ல் இணைந்திருப்பதாக தகவல் வெளியானது. அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், அதேநேரத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை பிரியங்கா மோகன் மறுத்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து பிரியங்கா மோகன் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

மேலும் படிக்க | இசைஞானியோடு பாடும் முதல் வாய்ப்பு - நெகிழும் தேவி ஸ்ரீபிரசாத்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More