Home> Movies
Advertisement

Rajinikanth: அண்ணாத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

ரஜினிகாந்த் இன் அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை படக்குழு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

Rajinikanth: அண்ணாத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்தின் (Rajinikanth) அண்ணாத்தே (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர்.

ALSO READ | Super Star பற்றிய சூப்பர் செய்தி: இந்த இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கிறாரா ரஜினி?

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. தற்போது உடல் நலம் தேறிய பின்னர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 8-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். 

இந்நிலையில் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More