Home> Movies
Advertisement

ரஜினியிடம் ஆசி வாங்கிய லாரன்ஸ் - எதற்கு தெரியுமா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசீர்வாதம் பெற்றார்.

ரஜினியிடம் ஆசி வாங்கிய லாரன்ஸ் - எதற்கு தெரியுமா?

ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

படமான 800க்கும் மேற்பட்ட நாள்கள் ஓடி சாதனை படைத்தது. படத்தில் ரஜினி போட்டிருந்த மன்னர் கெட்டப்பும், அவர் கூறும் கல கல கல வசனும் இன்றளவும் புகழ் பெற்றிருப்பவை.

fallbacks

இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பி.வாசு திட்டமிட்டார். இதுகுறித்து ரஜினியிடமும் அவர் அணுகியபோது ரஜினியோ சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும் படிக்க | Sushmita Sen Lalit Modi: 56 வயதில் காதலியை அறிமுகப்படுத்திய லலித்மோடி

எனவே வேறு ஒரு கதாநாயகனை வைத்து இயக்க திட்டமிட்டார் வாசு. அதன்படி படத்தில் ரஜினியின் தீவிரமான ரசிகரும், நடன அமைப்பாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் படிக்க | பாலிவுட்டுக்கு பறந்த ’குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி.. விஷயம் இதுதான்

வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 

இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கியது. இதனையொட்டி ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.  அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், இன்று சந்திரமுகி 2 ஷூட்டிங் தொடங்குகிறது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனா இது? வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு!

அதனையொட்டி எனது தலைவர் மற்றும் குருவான ரஜினியிடம் ஆசி பெற்றேன்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More