Home> Movies
Advertisement

ராகவா லாரன்ஸ் சகோதரர் முதல் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் என்பவர் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ராகவா லாரன்ஸ் சகோதரர் முதல் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமையோடு தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் ராகவா லாரன்ஸ்.  திகில் படங்களுக்கு பெயர் போனவர் இவர் என்றே சொல்லலாம், இவரது நடிப்பில் வெளியான பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது நல்ல இயக்குனராகவும், நடிகராகவும் மற்றும் நடன இயக்குனராகவும் புகழின் உச்சியில் உள்ள ராகவா லாரன்ஸ், அருள் நிதியின் "டைரி" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இன்னாசி பாண்டியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள "புல்லட்" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று நடிக்க உள்ளார். 

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

ஆனால் இந்த படத்தின் நாயகனாக ராகவா லாரன்சின் உடன்பிறந்த தம்பி எல்வின் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் அவர் முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகுகிறார். கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசை அமைக்கிறார். மேலும் இந்த பூஜையுடன் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு வைஷாலி ராஜ் என்பவர் நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ’புல்லட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் 'மேயாத மான்' மற்றும் 'குளு குளு' போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லாரன்ஸ் நடிக்கும் ஹாரர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராகவா லாரன்ஸை வைத்து ரத்னகுமார் இயக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் லோகேஷ். லோகேஷ் கனகராஜுடன் தான் முதன்முறையாக இணையவுள்ள செய்தியினை நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டியொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர் செய்த சாதனை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More