Home> Movies
Advertisement

'A Call to Spy' பிரெஞ்சு திரைப்படத்தில் பிரிட்டிஷ் உளவாளியாகும் ராதிகா ஆப்தே...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் உளவாளி நூர் இனாயத் கானாக ராதிகா ஆப்தே நடித்த 'A Call to Spy' பிரெஞ்சு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

'A Call to Spy' பிரெஞ்சு திரைப்படத்தில் பிரிட்டிஷ் உளவாளியாகும் ராதிகா ஆப்தே...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் உளவாளி நூர் இனாயத் கானாக ராதிகா ஆப்தே நடித்த 'A Call to Spy' பிரெஞ்சு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இரண்டாம் உலகப் போரின் அடிபப்டையில் உருவாக்கப்பட்ட இந்த த்ரில்லர் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கியிருக்கிறது. பிரான்சில் நாஜி நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வின்ஸ்டன் சர்ச்சிலின் நிர்வாகத்தால் உளவாளிகளாக நியமிக்கப்பட்ட பெண்களின் உண்மையான கதையைச் சொல்லும் திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

பெண்கள் மீது சந்தேகம் இல்லாத அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை அரசுக்கு உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தியது.

spymistress கதாபாத்திரத்தில் Vera Atkins மற்றும்  Sarah Megan Thomas வர்ஜீனியா ஹால் காதாபாத்திரத்திலும், நூர் இனாயத் கான் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேயும் நடித்துள்ளனர்.  
இந்தத் திரைபப்டத்தில் Linus Roache, Rossif Sutherland and Samuel Roukin என பல சர்வதேச புகழ் பெற்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.  

Read Also | சர்வதேச திரைப்பட விழாவில் ‘கைதி’ படம்: மகிழ்ச்சியில் படக்குழு!!

மேகன் தாமஸ் (Megan Thomas)திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர், பெண்கள் உளவாளியாக எப்படி மாற்றப்படுகிறார்கள், அவர்கலூக்கு எவ்வாறு பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளிலும், அமெரிக்காவில் VOD(Video On Demand)யிலும் வெளியாகும்.

Read More