Home> Movies
Advertisement

குதூகலமாக இருக்கும் பிக்பாஸ் வீடு; புதிய ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குதூகலமாக இருக்கும் பிக்பாஸ் வீடு; புதிய ப்ரோமோ

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் நடிகர் கமல்ஹாசன்.

ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது

18 போட்டியாளர்களின் விவரம்:

ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ராஜு பிக்பாஸ் அளித்த கடிதத்தைப் படித்து வீட்டின் விதி முறைகள் கூறுப்பிடுகிறார். மேலும் அபிஷேக் இடையில் குறுக்கிட அப்புறமா கூப்பிட்டுபோய் லவ் பண்ணு என்று ராஜூ நகைச்சுவையாக கூறுகிறார். தற்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை இந்த ப்ரோமோ மூலம் பார்க்க முடிகிறது.

ALSO READ | Big Boss 5: பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More