Home> Movies
Advertisement

சந்தோஷ் நாராயணனை சீண்டிய தயாரிப்பாளர் கே.ராஜன்

அமைச்சர் ரிட்டன்ஸ் படவிழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை தயாரிப்பாளர் கே.ராஜன் மறைமுகமாக சீண்டியுள்ளார்.  

சந்தோஷ் நாராயணனை சீண்டிய தயாரிப்பாளர் கே.ராஜன்

சென்னையில் அமைச்சர் ரிட்டன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் மற்றும் நாயகி அட்சயா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்திற்கு இசையமைத்துள்ள தேவா பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களை நினைத்து பார்ப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். 

மேலும் படிக்க | I am Groot: முதல் அனிமேஷன் தொடர் வெப் சீரீஸ் விரைவில் டிஸ்னியில்: ஆகஸ்ட் மாத ரிலீஸ்

சின்னத்திரையில் இருந்து நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், படத்துக்கு இசையமைத்த தேவாவை வெகுவாக பாராட்டினார். தமிழ்நாட்டில் இருந்தவாறே இசையமைக்கும் தேவா, லண்டன் சென்றால் தான் இசை வரும் என கூறுவதில்லை. பாடல்களை இங்கேயே கம்போசிங் செய்கிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தயாரிப்பாளர்களை அவர்களும் நினைத்து பார்க்க வேண்டும் எனத் கேட்டுக்கொண்டார்.  

fallbacks

அண்மையில், நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் லண்டனில் இசையமைத்தார். வடிவேலு ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்துக்கு லண்டனில் இசையமைக்கப்பட்டதைதான் மறைமுகமாக தயாரிப்பாளர் கே.ராஜன் ’அமைச்சர் ரிட்டன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மறைமுகமாக சாடியதாக நெட்டிசன்கள் கொளுத்திபோட்டுள்ளனர். அமைச்சர் ரிட்டன்ஸ் படம் கண்ணியமான அமைச்சரின் காதல் கதையைக் கூறுகிறதாம். 5 சண்டைக் காட்சிகள் மற்றும் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. கவிஞர்கள் சினேகன் மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு  திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனிடம் உண்மையை மறைத்த ’டான்’ இயக்குநர் - போட்டுடைத்த உதயநிதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More