Home> Movies
Advertisement

“அட்லீ என்னை ஏமாத்திட்டாரு..” ஜவான் பட நாயகி சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Priyamani About Jawan Director Atlee: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருப்பவர், பிரியாமணி. இவர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.   

“அட்லீ என்னை ஏமாத்திட்டாரு..” ஜவான் பட நாயகி சொன்ன அதிர்ச்சி தகவல்..!

தமிழ் திரையுலக இயக்குநர் அட்லீ, பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக்கானை வைத்து இயக்கியிருந்த படம், ஜவான். இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கானிற்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜவான் படத்தில் பிரியாமணியும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

‘முத்தழகு’ பிரியாமணி:

2007ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், பிரியாமணி. அதற்கு முன்னரே சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய செய்தது. இந்த படத்திற்கு பிறகு அவரை அனைவரும் ‘முத்தழகு’ பிரியாமணி என்று அழைக்கத்தொடங்கினர். 

மேலும் படிக்க | ஷாருக்கானுக்கு 100 கோடி-நயன்தாராவுக்கு இவ்ளோதானா..! ‘ஜவான்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

ஷாருக்கானுடன் பிரியாமணி..

ஷாருக்கான் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் பிரியாமணி “1234” பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அதன் பிறகு, 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஷாருக்குடன் சேர்ந்து நடிக்க ‘ஜவான்’ படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர், ஷாருக்கானின் கொள்ளை கூட்டத்தில் முக்கிய உறுப்பினராக நடித்திருந்தார். 

“அட்லீ என்னை ஏமாத்திட்டாரு..”

பிரியாமணி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது ஜவான் பட இயக்குநர் அட்லீ குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படத்தில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என தன்னிடம் அட்லீ கூறியதாகவும் அவருடன் எனக்கு ஒரு காட்சி வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் பிரியாமணி தெரிவித்துள்ளார். இதற்கு அட்லீ ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய் இப்படத்தில் இல்லை என்று தெரிந்தவுடன் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாகவும் அட்லீ தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஜோக் அடித்தார்.

ஷாருக்கானுடன் ஆட முடியவில்லை...

ஷாருக்கானுடன் ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இணைந்து நடனமாடிய பிரியாமணி, ஜவான் படத்திலும் அது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால், ‘ஜிந்தா பிந்தா’ பாடலின் படப்பிடிப்பின் போது படத்தின் நடன இயக்குநர் ஷோபி, தன்னை ஷாருக்கானுக்கு பின்னால் நிற்க வைத்ததாகவும் இதனால் அவர் மீது கோபமாக இருப்பதாகவும் கூறினார். 

ஜவான் பட வசூல்:

ஜவான் திரைப்படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். தமிழ் நாட்டை விட வட இந்தியாவில் இப்படத்திற்கு வசூல் எகிறியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூலே சுமார் 80 கோடியை தொட்டது. படம் வெளியாகி 1 வாரம் ஆகியிருக்கும் நிலையில், ஜவான் படம் தற்போது 700 கோடி வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிரடி ஆக்ஷன்..கொஞ்சம் சுட்ட கதை..

ஜவான் படத்தில் ப்ளஸ் பாய்ண்டாக ஆக்ஷன் காட்சிகளும் ஒளிப்பதிவும் கூறப்பட்டது. தமிழ் சினிமா இயக்குநர்களில் வெகு சில படங்களிலேயே ‘டாப்’ இடத்திற்கு சென்றவர் அட்லீ. ஆனால் இவர் இயக்கியுள்ள படங்களின் மீது எப்போதும் ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இவரது படங்களில், பிற படங்களின் கதைகள் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளை தெரிவிப்பதுண்டு. அப்படி ஜவான் படத்திலும் இவர் தன் படங்களில் இருந்த சில காட்சிகளை அப்படியே வைத்துள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும் பலருக்கு படம் பிடித்துள்ளதால் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது ‘ஜவான்’. 

மேலும் படிக்க | பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More