Home> Movies
Advertisement

‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Priya Anand Salary For Leo Movie: லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர், பிரியா ஆனந்த். இவர் இப்படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? 

‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அதில் ஒருவர், பிரியா ஆனந்த். 

லியோ திரைப்படம்:

விஜய்-லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம், லியோ. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இதில், சர்ப்ரைஸாக சில நடிகர்களையும் இறக்கியிருந்தனர். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே லியோ படத்தில் பிரியா ஆனந்த் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர் என்பது முன்னரே அனைவருக்கும் தெரியும். வழக்கமாக அனைத்து படங்களிலும் நாயகிகளை தன் கதைகளில கொல்லும் லோகேஷ் கனகராஜ், இவரையும் கொன்று விடுவார் என கூறப்பட்டது. 

பிரியா ஆனந்தின் சம்பளம்..

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியா ஆனந்த். தமிழில் வாமனன் படத்தில் நடித்து பிரபலமானவர் இவர். இதையடுத்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நடிகை பிரியா ஆனந்த், லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடத்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் சிறியதாக இருந்தாலும், இவருக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

பிரியா ஆனந்த், ஒரு படத்திற்கு 1-2 கோடிகள் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இவர், லியோ படத்தில் நடிப்பதற்காக 50 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். 

மேலும் படிக்க | நெல்சனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்-சுட சுட அப்டேட்ட சொன்ன சினிமா பிரபலம்!

லியோ வசூல்..

லியாே திரைப்படம், இரண்டே நாட்களில் உலகளவு வசூலில் 100 கோடிகளை தாண்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படம் வெளியான முதல் வாரத்தில் லியோ படத்தின் வசூல் 300 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் என்பதால், இந்த இரண்டு நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

பிரியா ஆனந்தின் அடுத்த படம்..

10 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருந்தாலும், இன்னும் வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் இருக்கிறார் பிரியா ஆனந்த். லியோ படத்திற்கு முன்னர் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் சரியான வரவேற்பினை பெறவில்லை. இவர் அடுத்து நடித்துள்ள படம், ‘அந்தாகன்’. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘அந்தாதுன்’. காமெடி-த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தின் தமிழ் ரீ-மேக்தான், அந்தாகன். இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். சிம்ரனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரசாந்திற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து தமிழில் ‘சுமோ’ என்ற படத்தில் நடிக்கிறார். கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் விக்ரமன் மனைவி-கண்டுகொள்ளாத பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More