Home> Movies
Advertisement

கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?

Pradeep Antony Wishes Kamal Haasan: பிக்பாஸ் பிரதீப், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து சமீபத்தில ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இன்று கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுவதை தாெடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்:

தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களுள் ஒன்று, பிக்பாஸ் சீசன் 7. கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பலமான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. நடிகரான இவர், தனது கதைகளை இயக்க பணம் தேவைப்படுவதால் கண்டிப்பாக பிக்பாஸ் டைட்டில் தனக்கு வேண்டும் என்று கூறி நன்றாகவே விளையாடி வந்தார். இவருக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வந்தாலும் வெளியில் இவருக்கு மக்களின் ஆதரவு நிறையவே இருந்தது. 

பிரதீப் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த கடைசி வாரம் சக போட்டியாளரான கூல் சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதற்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். இதனால் கடுப்பான பிற போட்டியாளர்கள் அவர்களுக்குள் “உரிமை குரல்” எழுப்ப வேண்டும் என்று பேசிக்கொண்டனர். அப்போது, பெண்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பின்மை இருப்பதாக குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இதையடுத்து பிற போட்டியாளர்களிடம் இது குறித்து தனித்தனியாக பேசிய கமல், அனைவரும் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அதன்படியே அவரை வெளியில் அனுப்பினார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | நடிப்பை தவிர கமல்ஹாசனிடம் இருக்கும் ‘பிற’ திறமைகள்-என்னென்ன தெரியுமா..?

பிரதீப்பிற்கு ஆதரவளித்த மக்கள்:

பிரதீப் ஆண்டனிக்கு நடந்தது அநீதி எனவும், அவரது தரப்பு நியாயத்தை கேட்காமலேயே கமல் அவரை வெளியேற்றி விட்டதாகவும் பலர் அவரவர் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். 60 கேமராக்கள், பிக்பாஸில் வேலை பார்பார்ப்பவர்களின் கண்காணிப்பு..என இத்தனையும் இருந்தும் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என பெண்கள் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளை ஒட்டி, பிரதீப் ஆண்டனி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

பிரதீப் வெளியிட்ட பதிவு..

நடிகர் கமல்ஹாசனுக்கு காலை முதலே பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதீப் ஆண்டனியும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “69வது பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமாவில் நீங்கள் கலைத்துறைக்காக செய்த அர்பணிப்பிற்காக எப்போதும் எனக்கு உங்கள் மீது மரியாதை உள்ளது. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார். 

உள்ளே ஒரு உள்குத்து..

கமல்ஹாசன் மீது தனக்கு இருக்கும் அன்பை தனது ட்வீட் மூலம் வெளிப்படுத்திய பிரதீப், உள்ளே ஒரு உள்குத்தையும் வைத்துள்ளார். “நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய்” எனும் ஹேஷ்டேக்குகளை அவர் அந்த ட்வீட்டில் இணைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், #PradeepAntony, #Justiceforpradeepantony, #Unfair போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரதீப்பும் கமல்ஹாசனும் இந்திய அளவில் ட்விட்டர் எக்ஸ் ட்ரெண்டிங்கிள் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காதல் மன்னனாக திகழ்ந்த கமல்! முன்னாள் காதலிகளின் முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More