Home> Movies
Advertisement

20 கிலோ எடையை குறைத்து மாஸ் காட்டும் பிரபு

நடிகர் பிரபு உடல்மெலிந்த புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

20 கிலோ எடையை குறைத்து மாஸ் காட்டும் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு. சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைப் படங்களில் நடித்திருக்கும் பிரபு, பின்னாட்களில் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இளைய திலகம் என்று அன்போடு அழைக்கப்படத் தொடங்கினார்.

இவர் பல விதமான கேரக்டர்களை நடித்து 80-களில் இருந்து 2000-ம் ஆண்டுகள் வரை முன்னணி ஹீரோவாக மக்களிடையே திகழ்ந்தார். தற்போது நடிகர் பிரபு (Actor Prabhu) சற்று உடல்மெலிந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 20 கிலோ வரை தனது உடல் எடையைகிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

fallbacks

ALSO READ: Palindrome: பிரபுதேவாவின் வினோதன் திரைப்படத்தில் இருவழி ஒக்குஞ்சொல் அமைந்த முதல் பாடல் 

இந்நிலையில் ஏன் திடீர் என இவர் உடல் எடையை குறைத்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தான் பிரபு மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இந்த தகவல் வெளியான முதல் ரசிகர்கள் பலர் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் - பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படத்தை நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். 

ALSO READ: திருப்பதியில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வீடியோ வைரல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More