Home> Movies
Advertisement

வைரலாகும் அஜித்தின் விவேகம் பட போஸ்டர்!

வைரலாகும் அஜித்தின் விவேகம் பட போஸ்டர்!

இயக்குனர் சிவா-அஜித் காம்போவில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. 

இந்நிலையில், நாளை அஜித்தின் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினம் முன்னிட்டு இன்று நள்ளிரவு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் பாடல் டீசர் வெளியிடப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன.

இந்நிலையில், அஜித் பர்த்டே ஸ்பெஷல் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர் என்றுக் கூறி ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில், தற்போது வைரலாக பரவி வருகிறது. 

இந்தப் போஸ்டரை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால், போஸ்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Read More