Home> Movies
Advertisement

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு எதிரான வழக்கில் திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர், சித்ரா. இவர் சீரியலில் நடிப்பது மட்டுமன்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி, வேலிநாச்சி உள்ளிட்ட பல தொடர்களில் அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சில டிவி நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தின் மீது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

சித்ராவை திருமணம் செய்து கொள்ள இருந்த ஹேம்நாத், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் அது தாள முடியாமல்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் பல விதமாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சித்ராவின் உடற்கூறாய்வில் அவரது மரணத்திற்கு காரணம் தற்கொலைதான் என்று சான்று அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார்.

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த நிலையில் ஹேம்நாத் தான் தங்களது மகளைக் கொலை செய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். மேலும் மரணத்தில் ஐயம் இருப்பதாக அப்போதே சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் பிணையில் வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கானது திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் இரு தரப்பும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்புக்கு அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சாட்சிகள் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் இத்தனை படங்கள் ரிலீஸா? இதோ முழு லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More