Home> Movies
Advertisement

காளி போஸ்டர்... இந்திய உயர்குழு ஆணையம் எடுத்த நடவடிக்கை

காளி போஸ்டர் தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து ஒட்டாவா இந்திய உயர்குழு ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

 காளி போஸ்டர்... இந்திய உயர்குழு ஆணையம் எடுத்த நடவடிக்கை

கவிஞராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் அறியப்படும் லீனா மணிமேகலை பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது காளி என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

அந்தப் போஸ்டரில் காளி கெட்டப்பில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட்டுடனும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடன் இருப்பதை கண்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

fallbacks

இதுகுறித்து விளக்கமளித்த லீனா, “டொரோண்ட்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் இந்தப் படம். படத்தைப் பார்த்த பிறகு "arrest leena manimekalai" ஹேஷ்டேக் போடாமல் "love you leena manimekalai" என்ற ஹேஷ்டேக்தான் போடுவார்கள். 

எனக்கு இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. இருக்கும்வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் அதையும் தரலாம்” என விளக்கமளித்திருந்தார்.

fallbacks

இதனையடுத்து காளி பட போஸ்டருக்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு திரைப்பட போஸ்டரில் இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரித்ததாக கனடாவில் உள்ள இந்து குழுக்களின் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

 

டொரோண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. எனவே கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளார்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்திய உயர்குழு ஆணையத்துக்கு ஹெ.ராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காளி தேவியை இழிவுப்படுத்தும் அசிங்கமான முயற்சியை தடுத்து நிறுத்தியதற்கும்; உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கும் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் படிக்க | மணிரத்னத்துக்கு போட்டியாக ராஜமௌலி எடுக்கப்போகும் ‘மகாபாரதம்’

அதேபோல், இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தலைவர்களுக்கும், கனடாவில் உள்ள இந்துக் குழுக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More