Home> Movies
Advertisement

யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த 'ஊ சொல்றியா மாமா' பாடல்!

சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய  'ஊ சொல்றியா மாமா' பாடல் யூடியூபில்  50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.  

யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த 'ஊ சொல்றியா மாமா' பாடல்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 'புஷ்பா'.  இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.  இந்த படத்தை காட்டிலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்று கூறலாம்.

ALSO READ | பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய்யின் 4 திரைப்படங்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா இயக்குனர் சுகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க இப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடினார்.  இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  இந்த அறிவிப்பு வெளியானத்திலிருந்தே ரசிகர்கள் சமந்தாவின் நடனத்தை பார்க்க ஆவலாக காத்திருந்தனர்.  

fallbacks

இதனையடுத்து சமந்தா நடனமாடும் இப்பாடலின் lyrical வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.  'ஊ சொல்றியா மாமா' என தொடங்கும் இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பாடியுள்ளார், இதன் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.  பெண்களை தாக்கி பாடல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், ஆண்கள் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் காண்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த பாடல் அமைந்தது.  இப்பாடலுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பலரும் இப்பாடலை ஒன்ஸ் மோர் கேட்டனர்.

 

ரஷ்மிகாவின் நடிப்பை பார்க்க வந்தவர்களைவிட சமந்தா நடனமாடிய  'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலை கேட்கதான் அதிக ரசிகர்கள் கூடினர்.  இந்நிலையில் பலரையும் கவர்ந்த இந்த பாடல் தற்போது யூடியூபில்  50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

ALSO READ | முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இவரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More