Home> Movies
Advertisement

GV நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் trailer!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

GV நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் trailer!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ஐங்கரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகலம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். காமன்மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜா முகமது படத்தொகுப்பாளராகவும், சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ட்ரைலர் காட்சிகளின் படி படத்தின் நாயகன் விஞ்ஞானியாகவும், தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கு அங்கிகாரம் இன்றி போராடுபவராகுவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More