Home> Movies
Advertisement

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR; டீஸர் வெளியானது!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் teaser வெளியாகியுள்ளது!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR; டீஸர் வெளியானது!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் teaser வெளியாகியுள்ளது!

கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களிடன் இணை இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

FIR (பைசல் இப்ராஹிம் ரைஸை) என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியாகிய நிலையில் தற்போது படத்தின் டீஸினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்த திரைப்படம் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் இணை நடிப்பில் வெளியாகும் முதல் படம் ஆகும். இந்த படத்திற்கு N அஸ்வந்த் இசையமைக்கின்றார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்ய, கிருமி புகழ் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கின்றார். 

விஷ்னு விஷால், கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்தார், தற்போது இயக்குனர் எழிலின் இயக்கத்தில் ‘ஜகஜலா கில்லாடி’ திரைப்படத்தில்  நிவேதா பெதுராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். தொடர்ந்து விஜய் சேதுபதி எழுதி சஞ்சீவ் இயக்க விக்ராந்த் உடன் VV18 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த பிஸி செடியூல்களுக்கு மத்தியில் தற்போது கேரள கனவு கன்னி மஞ்சிமா மோகன் ஜோடியில் FIR படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More