Home> Movies
Advertisement

பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்

Legal Notice to Ponniyen Selvan Movie: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி  இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 

பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்

சென்னை: பிரபல இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ள நிலையில், திரைப்படம் தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி  இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமரர் கல்கியின் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம், தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றின் அடிப்படையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தை பலரும் எடுக்க முயன்று கைவிட்டனர், இயக்குனர் மணிரத்னமும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நீண்ட நாட்களாக உருவாக்க நினைத்த நிலையில், தற்போது தான் இந்த கனவு பலித்துள்ளது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி  இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில், சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்று குறிப்பிட்டு, இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

fallbacks

இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதை என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொன்னியின் செல்வம் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தாங்கள் தெரிய வேண்டுமென வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், சோபிதா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விஜயகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றது.

சோழ வம்சத்தை வைத்து படம் எடுக்கும் மணிரத்தனம், வரலாற்றை திரித்திருந்தால் தெரியவந்தால் விஸ்வரூபம் எடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தவிர படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் படத்தில் நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More