Home> Movies
Advertisement

நினைத்தேன் வந்தாய் சீரியல்: அனைவரும் ஷாக்.. அனைவரும் அதிர்ச்சி.. நடக்க போவது என்ன?

Ninaithen Vandhai Serial Today Episode: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய் சீரியல்: அனைவரும் ஷாக்.. அனைவரும் அதிர்ச்சி.. நடக்க போவது என்ன?

Ninaithen Vandhai TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் கனகவல்லி பிறந்த நாளுக்காக குழந்தைகள் கேக் செய்து சர்ப்ரைஸ் கொடுக்க செல்வி மனோகரி பேச்சைக் கேட்டு பணத்தை திருடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கேக்கை சாப்பிட்ட எழில் சூப்பரா இருக்கு என்று சொல்லி குழந்தைகளை கட்டி அணைத்து பாராட்டுகிறான். அதன் பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவடைந்து கனகவல்லி ரூமுக்கு வர பணம் காணாமல் போன விஷயம் தெரியவந்து வீட்டில் எல்லோரிடமும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ராமையாவிடம் வீடு முழுக்க தேட சொல்ல அவரும் தேடி விட்டு பணம் எங்கேயும் இல்லை என்று சொல்கிறார். மனோகரி பணத்தை சுடர் ரூமில் வைக்க சொன்னேனே என்னாச்சு என்று கேட்க பிளாஷ்கட்டில் பணத்தை திருடிய செல்வி அதை சுடர் ரூமுக்கு கொண்டு வர அவள் போனில் பேசியபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க வைக்க முடியாமல் போகிறது. 

அவள் வெளியே வந்ததும் பணத்தை வைக்க உள்ளே நுழைய முயற்சி செய்ய கனகவல்லி தண்ணீர் குடிக்க வந்துவிட அப்போதும் வைக்க முடியாமல் போகிறது. இதனால் செல்வி பணத்தை வெளியில் தூங்கிக் கொண்டிருந்த ராமையாவின் பக்கத்தில் இருந்த பைக்குள் மறைத்து வைத்து விடுகிறாள்.

எழில் இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்று முடிவு எடுக்க மனோகரி வீட்ல எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாச்சு.. ஆனா இன்னும் ராமையாவோட பையில் தேடி பார்க்கலையே என்று சொல்ல அனைவரும் அதைக் கேட்டு ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

மேலும் படிக்க - 11 வருடங்கள் கழித்து ரிலீஸாகும் ‘மத கஜ ராஜா’ திரைப்படம்! எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More