Home> Movies
Advertisement

கணவரின் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

நடிகை நயன்தாரா, தன் கணவர் இயக்கும் படத்தில் ஹீரோவிற்கு அக்கா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

கணவரின் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

இயக்குநர் விக்னேஷ் சிவன், தான் இயக்கும் படத்தில் ஹீரோவிற்கு அக்காவாக நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கும் படம்..

‘போடா போடி’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்த விக்னேஷ் சிவன், தற்போது முக்கிய இயக்குநர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார். கோமாளி படத்தை இயக்கி அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். இவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. 

பிரதீப் ரங்காநதன்-விக்னேஷ் சிவன் கூட்டணி குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், இப்படம் குறித்த ஒரு அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. 

அக்காவாக நடிக்கும் நயன்தாரா..

நடிகை நயன்தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் ஹீரோவிற்கு அக்கா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம், குடும்ப டிராமா கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நயன்தாரா, தனது கணவர் இயக்கிய நானும் ரெளடிதான், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, சில நாட்களுக்கு முன்பு வெளியான அன்னபூரணி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் அவர் தன் கனவுகளை நனவாக்க நினைக்கும் சமையல் கலை நிபுணர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

fallbacks

மேலும் படிக்க | Chennai Flood: விளம்பரம் தேடிய விஷால்.. பதம் பார்த்த நெட்டிசன்கள்

மீண்டும் காதல் படங்களில் நடிக்கும் நயன்? 

நடிகை நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளாக கமர்ஷியல் படங்களிலேயே நடித்து வருகிறார். தன் கணவருடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.  ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல், இது நம்ம ஆளு உள்பட பல காதல் படங்களிலும் ஃபீல் குட் படங்களிலும் நடித்து வந்த நயனை பலரும் மிஸ் செய்தனர். இந்த நிலையில், தன் கணவரின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம், நல்ல காதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், தற்போது டெஸ்ட் மற்றும் மன்னாங்கட்டி சின்ஸ் 1960 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

விக்னேஷ் சிவனை கழற்றி விட்ட அஜித்குமார்..

விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்குமாரின் பெரிய ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். அவரது 68வது படத்தை விக்னேஷ் சிவன்தான் டைரக்டு செய்ய இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவனின் கதையை கேட்ட அஜித்குமார் அந்த கதை தனக்கு செட் ஆகும் என தோன்றாததால் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. வேறு நல்ல கதையுடன் வந்தால் வாய்ப்பு கொடுப்பதாக விக்னேஷ் சிவனிடம் அவர் கூறியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். பிரதீப் குமாரும், விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்க சரியாக கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே பட வேளைகள் தள்ளிப்போய் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மழை நிவாரண நிதிக்கு பெரிய தொகையை கொடுத்த ஹரிஷ் கல்யாண்! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More