Home> Movies
Advertisement

பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 37-வது பிறந்தநாளை அவரது மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார்.  

பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

தமிழ் திரையுலகில் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்துகொள்ள போகும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான்.  அனைவரும் எதிர்பார்த்தபடியே கடந்த ஜூன்-9ம் தேதி நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.  திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் இந்த இருவரின் திருமண புகைப்படங்கள் ரசிகர்களின் டைம்லைனை ஆக்கிரமித்து இருந்தது.  திருமணம் முடிந்த பிறகும் இவர்கள் அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களும் இணையத்தை அலங்கரித்து வந்தது.  தற்போது நயன்தாரா தனக்கு கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸை நினைத்து விக்னேஷ் சிவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் செப்டம்பர்-18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார், அவரது பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா துபாய் அழைத்து சென்றுள்ளார்.  உலகின் மிக உயரமான கட்டிடமாக போற்றப்படும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர், நயன்தாரா அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடினர்.  இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், 'எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் தங்கம், என் மனைவியின் சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

fallbacks

மேலும் படிக்க | 44 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் ஆகும் கமல்-ரஜினியின் படம்?

நயன்தாரா தனக்கு கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கும் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  பட வேலைகளை பொறுத்தவரை தற்போது நயன்தாராவிற்கு ஜவான், காட்ஃபாதர், கோல்ட், கனெக்ட் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் 75 போன்ற படங்கள் அடுக்கடுக்காக உள்ளன.  அடுத்ததாக விக்னேஷ் சிவன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்தை வைத்து 'ஏகே62' படத்தை இயக்கவிருக்கிறார்.

 

மேலும் படிக்க | துணை நடிகை சென்னையில் தூக்கிட்டு தற்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More