Home> Movies
Advertisement

நேச்சுரல் ஸ்டார் நானி - நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரா டீசர் வெளியீடு

நஸ்ரியா மற்றும் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் இன்று வெளியானது.

நேச்சுரல் ஸ்டார் நானி - நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரா டீசர் வெளியீடு

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடித்து வரும் திரைப்படம் அடடே சுந்தரா. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்தப் படத்தில் ரோகினி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடடே சுந்தரா படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | கதறி கதறி அழுத சஞ்சய் தத் - எதற்கு தெரியுமா?

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

fallbacks

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

fallbacks

இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கிட்டதட்ட 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். 2.10 நிமிடங்களை கொண்டுள்ள அடடே சுந்தரா டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் அடடே சுந்தரா ஜூன் 11 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More